அறிமுகம்

அன்பின் வணக்கம்...

"எழுத்தாளுமைகள்” தமிழ் எழுத்தாளர் இணையதளம் - இது புதிய முயற்சியோ, அல்லது புதிய ஞானோதயமோ அல்ல. நம்மை எவ்வாறேனும் அடையாளம் காணவிழையும் விருப்பத்தின் ஒரு திறப்பு.

பலரும்பலருக்கும் இவ்விதமான துவக்கத்தை அச்சு வெளியிலும், இன்று நவீன ஊடகங்களின் வாயிலாகவும் ஏற்கனவே பதிந்திருந்தாலும், இந்த வலைப்பக்கம் ஒரு முற்போக்கு எழுத்தாளனை இயன்றவரை அவரது படைப்புச் செயல்பாட்டு அடையாளங்களுடன் பதிவு செய்யவேண்டும் என்கிற பேரார்வமே…

இந்த அறிமுகப்பதிவுகளில் ஒரு படைப்பாளனை அங்கொன்றும் , இங்கொன்றுமாக இல்லாமல் வாசகனுக்கு முழுமையான அறிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதே  இந்த வலைப்பக்கத்தின் நோக்கமும் ஆர்வமும் ஆகும்.

குறிப்பாக சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் என தான் வாழ்ந்த காலத்தின் நினைவுகளை படைப்புகளாக மட்டுமின்றி அடையாளமாகவும் பதிந்திருக்கிற எழுத்தாளர்களின் அறிமுகமும், அவர்தம் படைப்புகளின் உள்ளடக்கமும் தெளிவுற அறிந்திட ஒரு திறப்பாக இப்பக்கங்கள் அமையும் என்று உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.

கண்ணாடியைக் கொத்தும் குருவியாக கலைஞர்கள் எழுத்தாளர்கள் தனக்குத்தானே நிழற்பட்டு மறைந்தது போகாமல் காலத்தின் பெருவெளியில் மெய் நிகராய் வாழ்வதற்கான பயணத்தின் சக்கரங்கள் இனி நிற்பதில்லை.

இணையவெளியில் முற்போக்கு, இடதுசாரி தமிழ் எழுத்தாளுமைகளைச் சேகரித்து, பாதுகாத்து, அடையாளப்படுத்துவோம்…

ஒருங்கிணைப்புக்குழு

அ.இலட்சுமிகாந்தன் - அ.உமர் பாரூக் - அய்.தமிழ் மணி

தொடர்புக்கு…

thamizhwriters@gmail.com