Jun 9, 2021

எழுத்தாளர் மு.முருகேஷ்

தொகுப்பு : வ.சு.வசந்தா

            ”வாழ்க்கை என்பது ஒன்றே என்றபோதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்களைத் தருவதாகவே வாழ்க்கை இருக்கிறது. இந்தப் பூமியில் பிறக்கப்போகிற புதிய தலைமுறைக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தியை, ஒரு புதிய நம்பிக்கையைத் தருவதாக நம் வாழ்வின் பங்களிப்பு இருக்க வேண்டும்என்று கூறும் எழுத்தாளர் மு.முருகேஷ், கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழாளர், பத்திரிகையாளர், குழந்தை இலக்கியப் படைப்பாளி, கல்வி ஆலோசகர், பதிப்பாளர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர்.

            புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் இவர் பிறந்த ஊர். சொ.முத்தையா - மு.மாரிக்கண்ணு இவரது பெற்றோர். நான்கு சகோதரிகள், மூன்று சகோதரர்களோடு பிறந்த இவர் வீட்டின் கடைக்குட்டி.

            கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட அ.வெண்ணிலா  இவரது இணையர் ஆவார். மு.வெ. கவின்மொழி, மு.வெ. அன்புபாரதி, மு.வெ.நிலாபாரதி இவர்களது குழந்தைகள்.

        மு.முருகேஷ் கோவில்பட்டியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், பின்னர் திருக்கோகர்ணத்தில் உயர்கல்வியும் பயின்றார். பத்தாம் வகுப்பில் தமிழ்ப் பாடத்தில் மாவட்ட அளவில் சிறப்பிடத்தையும், கணிதப் பாடத்தில் மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

              சிறுவயதிலிருந்தே படிப்பில் ஆர்வமிக்கவர். வரது ஆர்வம் நூலகங்கள் வாயிலாக மேன்மையுற்றது. இவரது நண்பர்களுடன் இணைந்து வாங்கி, வாசித்த படக்கதை (காமிக்ஸ்) நூல்களின் வழியாக வாசிப்புப் பயணம் துவங்கியிருக்கிறது.

             இவரது முதல் கவிதை பாரதி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நடத்திய 'பார்வை' என்னும் கையெழுத்து இதழில் 'புதுக்கணக்கு' என்னும் தலைப்பிலான மகாகவி பாரதியை பற்றியதாகும். நண்பர்களுடன் சேர்ந்து 'விடியல்' என்ற தட்டச்சிதழையும் நடத்தினார்.

             கவிஞர்கள் கந்தர்வன், நா.முத்துநிலவன், ஜீவி ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பு வாசிப்பினையும், இயக்கப் பணிகளையும் ஆழப்படுத்தியதுஅப்துல்ரகுமான், ஈரோடு தமிழன்பன், மித்ரா, அமுதபாரதி, அறிவுமதி போன்றோர்களின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார்.

             தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கிய பெருமன்றம், கம்பன் கழகம், பாவேந்தர் பாசறை முதலியவற்றின் தொடர்பால் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரது அறிமுகம் கிடைக்கப் பெற்றார்.

              கவிதை புனைவது இவருக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு. ஹைக்கூ என்னும் மூன்று வரி கவிதைகள் புனைவதில் தனக்கென ஒரு தடம் அமைத்துக்கொண்டார். தமிழ் ஹைக்கூ வரலாற்றில் மு.முருகேஷ் அவர்களின் பணி தனித்துவமானது.

             'ஒருவர் தனது மொத்த வாழ்நாளில் ஒரு ஹைக்கூ எழுதிவிட்டாலே மிகப் பெரிய  விஷயம் என்று அப்துல்ரகுமான் ஐயா சொல்லி இருக்க, மு.முருகேஷ் ஒன்றல்ல எண்ணற்ற ஹைக்கூகளைப் படைத்திருக்கிறார்' என்று இயக்குர் என்.லிங்குசாமி இவரைப் புகழ்ந்துள்ளார்.

            1993-இல் 'விரல் நுனியில் வானம்' என்ற தனது முதல் ஹைக்கூ நூலை வெளியிட்டார். தொடர்ந்து 66 கவிஞர்களின் ஹைக்கூக்களைத் தொகுத்து 'கிண்ணம் நிறைய ஹைக்கூ' என்ற நூலைக்கொண்டு வந்தார். பதிப்பாளர் பா.உதயகண்ணன் அவர்களுடன் இணைந்து, 500 கவிதைகளின் தொகுப்பாகவேரில் பூத்த ஹைக்கூ, ‘திசையெங்கும் ஹைக்கூ, ‘நீங்கள் கேட்ட ஹைக்கூ, ‘இனி எல்லாம் ஹைக்கூ என்னும் நூல்களைக் கொண்டுவந்தார்.இனிய ஹைக்கூ என்னும் ஹைக்கூ கவிதைக்கான இதழைத் தொடங்கி, இளங்கவிஞர்களை ஊக்குவித்தார்.

            புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கக் கலைக்குழுவுடன் இணைந்து செயல்பட்டதன் மூலம் அதன் செயல்பாடுகளில் நீண்ட அனுபவம் பெற்றார். அறிவொளி இயக்க மாவட்ட அலுவலகத்தில் தகவல் தொடர்பாளர், கலைக்குழு பயிற்றுநர்,  'ஊர்கூடி' என்னும் இயக்கச் செய்தி இதழின் உதவி ஆசிரியர் என பொறுப்புகள் ஆற்றினார்.

            குழந்தைகளின் கைவண்ணம் வெளிப்படும்படி அவர்களே எழுதிப் பார்க்கும் வகையில் அமைந்த 'மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்' என்ற நூலைப் புதுமையாக வடிவமைத்திருந்தார். இவரைக் குழந்தைக் கவிஞர் என்றும் அழைக்கலாம். குழந்தைகளுக்காகப் படைத்த நூல்கள் ஏராளம்.

            தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - யுனிசெப்  இணைந்து செயல்படுத்தியவகுப்புகளுக்குப்    பின்னான திட்டப் பணியில் (After school Programme) மாநிலப் பயிற்றுநராகப் பணி புரிந்தார். யுரேகா கல்வி இயக்கத்தில் 2014 வரை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தார்.

            சமச்சீர் பாடத்திட்ட குழுவில் இணைந்து 1 மற்றும் 6-ஆம் வகுப்பு பாட நூல்கள் உருவாக்கம் செய்த வகையில் இவரது பங்கு முக்கியமானது.

                   இவரது 'குழந்தைகள் சிறுகதைகள்' எனும் நூல் தமிழக அரசின் 'புத்தக பூங்கொத்து' திட்டத்தில் தேர்வாகி, 32,000 தமிழக அரசு பள்ளிகளுக்கு அந்நூல் வழங்கப்பட்டிருக்கிறது.

                    இவரது கவிதைகள், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், விருதுநகர் வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி, சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

                    மு.முருகேஷ் அவர்களின் கவிதைகள், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மு.முருகேஷ் அவர்களின் ஹைக்கூ மற்றும் புதுக்கவிதை நூல்களை இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் முனைவர் மற்றும் இளமுனைவர் பட்டங்களுக்காக ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர்.

                    தற்போதுஇந்து தமிழ் திசை நாளிதழில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

இதுவரை பெற்ற இலக்கியப் பரிசுகள்

1. பாரத ஸ்டேட் வங்கியின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசு மூன்று முறை - 1994,  1998,  2001.

2. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - செல்வன் கார்க்கி கவிதை விருது இரு முறை - 1996,  2002.

3. தியாக துருகம் பாரதியார் தமிழ்ச் சங்க சிறந்த குழந்தை இலக்கிய நூல் பரிசு – 2011.

4. திருப்பூர் தமிழ்ச்சங்க சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது – 2011.

5. 'கவி ஓவியா' இதழின் சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான பரிசு – 2013.

6. ' நாங்கள் இலக்கியம்' கலை இலக்கிய சிந்தனையாளர்கள் மன்றம் சார்பில் சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு - 2015.

7. கம்பம் பாரதி இலக்கியப் பேரவை சார்பில் சிறந்த சிறுகதை நூலுக்கான இரண்டாம் பரிசு 2016.

8. தமுஎகச - கு.சின்னப்பபாரதி சிறுவர் இலக்கிய நூலுக்கான பரிசு - 2016.

9. கவிமுகில் அறக்கட்டளை 'தலைகீழாக பார்க்கிறது வானம் 'நூலுக்கான பரிசு - 2017

10. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நடத்திய போட்டியில் , தவத்திரு குன்றக்குடி அடிகளார் விருது – 2017. 

11. ராஜபாளையம் மணிமேகலை மன்றம் நடத்திய சிறுவர் நூல் பரிசுப் போட்டியில் சிறந்த சிறுவர் நூலுக்கான விருது  - 2017.

12. அனைத்து இந்திய எழுத்தாளர் சங்கம் சிறந்த ஹைக்கூ நூலுக்கான இரண்டாம் பரிசு 2018.

13. புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சிறுவர் இலக்கிய நூலுக்கான பரிசு 2017.

14. 'கவிதை உறவு 'இதழின் சார்பில் வெளியான மனிதநேயம் / வாழ்வியல் நூலுக்காக 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ...? ' நூலுக்கு முதல் பரிசு – 2018.

15. திருப்பூர் இலக்கிய விருது – 2018.

இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளுக்காகப் பெற்ற பட்டங்கள்

1. புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் ஹைக்கூ வித்தகர் விருது – 2008.

2.  மதுராந்தகம் தமிழிலக்கியத் தென்றலின் திரு.வி.க. தமிழ்முகில் விருது2008.

3. திருவண்ணாமலை எக்ஸ்னோரா வழங்கிய இலக்கிய பசுமை விருது – 2010.

4. ‘அறிவின் சுழல்மாத இதழ் வழங்கிய ஹைக்கூ சுடர் விருது – 2013.

5. மலேசியா எஸ்.பழனிவேல் நினைவு அறக்கட்டளை வள்ளுவர் விருது – 2013.

6.  ஈரோடு தமிழன்பனின் 80-ஆம் ஆண்டு பிறந்தநாள் விருது – 2014.

7. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருது – 2015.

8. புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழகம் சார்பில் செம்பணிச்சிகரம்

விருது – 2015.

9. குவைத் நாட்டிலுள்ள வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கத்தின் குறுங்கவிச் செல்வர் விருது – 2016.

10. உலகச் சான்றோர் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற விழாவில் இலக்கியச் சான்றோர் – 2017.

11. தமிழ் ஹைக்கூ நூற்றாண்டினையொட்டி சிவகாசி நீலநிலா கந்தகப் பூக்கள் இதழ் சார்பில் ஹைக்கூ செம்மல் விருது 2017.

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய / தொகுத்த நூல்களின் பட்டியல் 

புதுக்கவிதை நூல்கள்

1. பூவின் நிழல் (புதுக்கவிதை) – 1996
2. கொஞ்சும் ஹைக்கூ, கொஞ்சம் புதுக்கவிதை – 1998
3. 36 கவிதைகளும், 18 ஓவியங்களும் (புதுக்கவிதை) – 2001
4. நீ முதல், நான் வரை...(காதல் கவிதைகள்) – 2001
5. குழந்தைகள்  ஊருக்குப் போய்விட்டன (புதுக்கவிதை) – 2002
6. கடவுளோடு விளையாடும் குழந்தைகள் (புதுக்கவிதை) – 2006
7. மனசைக் கீறி முளைத்தாய்... (காதல் கவிதைகள்) – 2008
8. கழிப்பறைக்குச் சென்றிருக்கிறார் கடவுள் (புதுக்கவிதை) – 2013

ஹைக்கூ கவிதை நூல்கள்

1. விரல் நுனியில் வானம் (ஹைக்கூ) – 1993
2. என் இனிய ஹைக்கூ (ஹைக்கூ) – 1
995
3. தோழமையுடன்(ஹைக்கூ) – 1999

4
. ஹைக்கூ டைரி - 2000
5
. தரை தொடாத காற்று ( ஹைக்கூ அந்தாதி) – 2001
6.  நிலா முத்தம் (ஹைக்கூ) – 2002
7
. என் இனிய ஹைக்கூ ( தேர்ந்தெடுத்த 500 ஹைக்கூ கவிதைகள்) - 2007 
8
. உயிர்க் கவிதைகள் (ஹைக்கூ) – 2010
9. வரும்போலிருக்கிறது மழை (ஹைக்கூ) – 2012 
10.  தலைகீழாகப் பார்க்கிறது வானம் (ஹைக்கூ) – 2016
11.
குக்கூவென… (ஹைக்கூ) – 2019

சிறுகதை நூல்

1. இருளில் மறையும் நிழல் (சிறுகதைகள்) - 2016  

குழந்தைகளுக்கான நூல்கள்

1. பெரிய வயிறு குருவி (சிறுவர் கதை)  - 2005
2. உயிர்க் குரல் (சிறுவர் படக்கதை)   - 2006  
3. ஹைக்கூ குழந்தைகள் (ஹைக்கூ கவிதை) - 2009                                                                                                            
4. மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்
  (சிறுவர் பயிற்சி நூல்) – 2010
5. கொஞ்சம் வேலை நிறைய சம்பளம்  (சிறுவர் படக் கதை)  - 2010                                                                             
6. காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி  (சிறுவர் கதை) - 2011  
7. குழந்தைகள் – சிறுகதைகள்  (சிறுவர் கதைகள்)  - 2011                                                                                                                                     
8. எடுத்தேன் படித்தேன் தேன் கதைகள்  (சிறுவர் கதைகள்) - 2015                                                                   
9. படித்துப் பழகு  (அரும்புகளுக்கான கதை) - 2014                                                       
10. பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்  (சிறுவர் கதைகள்) 2015                                                            
1
1. ஒல்லி மல்லி குண்டு கில்லி  (சிறுவர் கதைகள்) - 2016                                                          
12.
அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை (சிறுவர் கதைகள்) - 2 017
13.
தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும் (சிறுவர் கதைகள்) – 2018
14.
தினுசு தினுசா விளையாடலாமா..? (பாரம்பரிய சிறுவர் விளையாட்டுக்கள்-50) - 2018
15. 
நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை (சிறுவர் நாவல்) - 2019
1
6. நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு பக்கங்கள் கொண்ட கதை அட்டைகள்

 குழந்தைகளுக்கான கட்டுரை நூல்கள்

1. குழந்தைகள் உலகம் – உள்ளே வெளியே ( மனவியல் கட்டுரைகள்) -2011
2. குழந்தைகளல்ல குழந்தைகள் ( மனவியல் கட்டுரைகள்) – 2014
3.
சின்னச் சிறகுகளால் வானம் அளப்போம் (சிறார் கட்டுரைகள்) - 2018

  கட்டுரை, ஆய்வு, முன்னுரைகள், சுய முன்னேற்றம் மற்றும் பிற நூல்கள்

1. மின்னல் பூக்கும் இரவு (கட்டுரை, கதை, நேர்காணல், விமர்சனம்) - 2004
2. ஹைக்கூ கற்க (33 ஹைக்கூ நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள்) - 2008
3. ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை  (கால்நூற்றாண்டு ஹைக்கூ வரலாறு) - 2012
4. பெண்ணியம் பேசும் தமிழ் ஹைக்கூ (இளமுனைவர் பட்ட ஆய்வு) – 2014
5. தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டுத் தடத்தில்... (தமிழ் ஹைக்கூ வரலாறு) – 2016
6. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (தன்னம்பிக்கை கட்டுரைகள்) – 2016
7. 
ஆயிரம் பூக்கள் மலரட்டும் (கவிஞர்களின் அறிமுகக் கட்டுரைகள்) – 2017
8.
குழந்தைகளால் அழகாகும் பூமி (குழந்தைகள் பற்றிய கட்டுரைகள்) - 2018
9.
வெற்றியின் எல்லை வெகுதூரமில்லை (தன்னம்பிக்கை கட்டுரைகள்) – 2019
10.
பூமியெங்கும் புத்தக வாசம் (கட்டுரைகள் & நேர்காணல்கள்) – 2019

தொகுத்த புதுக்கவிதை நூல்கள்

1. தெருவோர தேசம் (புதுகை பூவண்ணன், கவித்தூரிகையுடன் இணைந்து) – 1990
2. மழைத்துளிப் பொழுதுகள் (இரா.அ.தென்றல் நிலவனுடன் இணைந்து) - 1994
3. என் மனசை உன் தூரிகைத் தொட்டு... (அ.வெண்ணிலாவுடன் இணைந்து) – 1998

தொகுத்த ஹைக்கூ கவிதை நூல்கள்

1. கிண்ணம் நிறைய ஹைக்கூ - 1995
2. வேரில் பூத்த ஹைக்கூ - 1997
3. நீங்கள் கேட்ட ஹைக்கூ - 2000
4. திசையெங்கும் ஹைக்கூ – 2002
5. இனியெல்லாம் ஹைக்கூ – 20013
6.
ஹைக்கூ நந்தவனம் – 2017

தொகுத்த சிறுவர் கதை நூல்கள்

1. மலையிலிருந்து கதை அருவி   (சிறுவர் கதைகள்) - 2008                                                          
2. டவுனுக்குப் போன குருவி (இரத்தின.விஜயனுடன் இணைந்து சிறுவர் கதைகள்) - 2006                                                                                             

பிற மொழி சிறப்பு வெளியீடுகள்

1. நிலா முத்தம் (160 ஹைக்கூ கவிதைகள் கொண்ட மலையாள மொழிபெயர்ப்பு நூல்) – 2005
2. தேசாடன சலபங்ஙள் (டாக்டர் டி.எம்.ரகுராம் மலையாள மொழிபெயர்ப்பில் 4 புதுக்கவிதைகளும், 6 ஹைக்கூ கவிதைகளும் இடம்பெற்றுள்ளன) - 2009

3.
தொண்டநாடு கதலு (தெலுங்கு சிறுகதைத் தொகுப்பில்மயிருசிறுகதை இடம்பெற்றுள்ளது) - 2013
4. The First Story Told by a Daughter to her Mother (
அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை - நூலின் ஆங்கில மொழியாக்கம்: வி.சைதன்யா) – 2018
5. CONTINUMM (A Harvest or Modern Tamil Poetry – Dr.K.S.Subramanaian
மொழிபெயர்த்த நூலில் ஆங்கில மொழியாக்கத்தில் கவிதை இடம்பெற்றுள்ளது) - 2019
6
. LET HAIKOO BLOSSOM (மலர்க ஹைக்கூ - தேர்ந்தெடுக்கப்பட்ட 100 தமிழ் ஹைக்கூ கவிதைகளின் ஆங்கில – இந்தி  – மொழிபெயர்ப்பு) - 2020